

சென்னை,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். இந்த பிரச்சினையில் 3 ஆண்டுகள் ஆகியும் தகுதி நீக்க நடவடிக்கையை இழுத்தடித்தது தவறு. இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருக்கிறது. எனவே அவசரமாக அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே கோரிக்கையின் சாராம்சம்.
ஒரு கட்சியின் சார்பாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்கள், கொறடா உத்தரவை மீறி சட்டசபையில் மாற்றி வாக்களித்தாலே தேர்ந்தெடுத்த மக்களையும் அவமதித்ததாகவே அர்த்தம். எனவே சட்டப்படி 15 நாட்களுக்குள் அவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
நம்பிக்கைதான் வாழ்க்கை. எனவே சட்டப்பேரவை தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.