

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு (வன்கொடுமை தடுப்பு நாள்) கூட்டம் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலன், வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சமீர் ஆலம், நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.