காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்

ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்
Published on

ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழு, விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவை, நிலுவையில் உள்ளவை விசாரணை வழக்குகளின் மொத்த எண்ணிக்கை, தீர்ப்பு வழங்கப்பட்டவை, நீண்ட காலமாக நிலுவையில் உள்ளவை அதற்கான காரணம் மேல் முறையீடு செய்ய வேண்டிய வழக்குகள் பற்றியும் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை, தண்டனை நிலையில் தீருதவி தொகை வழங்கக்கோரி பெறப்பட்ட மொத்த கருத்துருக்கள் நிவாரணத்தொகை வழங்கப்பட்டவை, மீதம் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நிலுவைக்கான காரணம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூடுதல் நிவாரணங்கள்

வன்கொடுமையால் கொலை, இறப்பு நடந்த நிகழ்வுகளில் கூடுதல் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டியவை நிலுவை மற்றும் நிலுவைக்கான காரணம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், வருவாய் ஆர்.டி.ஓ.க்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com