பட்டாசு வெடித்து அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

நத்தம் விசுவநாதன் அ.தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பட்டாசு வெடித்து அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
Published on

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ.வை கட்சியின் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்தார். இதையொட்டி திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

மேலும் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஏ.டி.நெப்போலியன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்தையா, இணை செயலாளர் ராமமூர்த்தி, மாணவர் அணி மாவட்ட இணை செயலாளர் மணிகண்டன், சின்னு, இளைஞர் அணி தலைவர் சரவணன், வடக்கு பகுதி ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்கள் கணேசன், செந்தில், வடக்கு பகுதி மீனவர் பிரிவு துணை தலைவர் கமலக்கண்ணன், கிழக்கு பகுதி மகளிர் அணி தாயாரம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com