அ.தி.மு.க. மாநாடு: மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்

அ.தி.மு.க. மாநில மாநாட்டையொட்டி மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. மாநாடு: மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்
Published on

மதுரை,

அ.தி.மு.க. சார்பில் மதுரை மாவட்டம் வலையங்குளம் கருப்பசாமி கோவில் அருகே அ.தி.மு.க. மாநாடு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி பிற மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விருதுநகரிலிருந்து வரும் வாகனங்கள் திருச்சி மற்றும் சென்னை செல்வதற்கு திருமங்கலம், கப்பலூர், வாடிப்பட்டி, திண்டுக்கல் மார்க்கமாக திருச்சி செல்ல வேண்டும்.

தூத்துக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் திருச்சி, சென்னை செல்வதற்கு எட்டயபுரம் வழியாக கோவில்பட்டி சென்று விருதுநகர், திருமங்கலம், கப்பலூர், வாடிப்பட்டி, திண்டுக்கல் மார்க்கமாக திருச்சி மற்றும் சென்னை செல்ல வேண்டும். சென்னை, திருச்சியிலிருந்து மதுரை மார்க்கமாக விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் கொட்டாம்பட்டியில் இருந்து நத்தம், திண்டுக்கல், வாடிப்பட்டி, திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும்.

சென்னை, திருச்சியில் இருந்து....

சென்னை, திருச்சியிலிருந்து மதுரை மார்க்கமாக தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் மேலூரிலிருந்து திருவாதவூர், பூவந்தி, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை சாலை வழியாக செல்ல வேண்டும். ராமநாதபுரம், சிவகங்கையில் இருந்து தூத்துக்குடி, விருதுநகர் செல்லும் வாகனங்கள் திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை வழியாக செல்லலாம். சென்னை, திருச்சியில் இருந்து மதுரை மார்க்கமாக ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் மேலூரிலிருந்து சிவகங்கை வழியாக செல்ல வேண்டும்.

தேனியிலிருந்து மதுரை மார்க்கமாக திருச்சி செல்லும் வாகனங்கள், நாகமலை புதுக்கோட்டையிலிருந்து வாடிப்பட்டி, திண்டுக்கல் மார்க்கமாக திருச்சி மற்றும் சென்னை செல்ல வேண்டும். தேனியிலிருந்து மதுரை மார்க்கமாக சிவகங்கை, ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் நாகமலைபுதுக்கோட்டையிலிருந்து துவரிமான், நகரி, தனிச்சியம், அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, அழகர்கோவில், மேலூர் மார்க்கமாக செல்ல வேண்டும்.

திண்டுக்கல்லில் இருந்து மதுரை மார்க்கமாக சிவகங்கை, ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் நத்தம், கொட்டாம்பட்டி, திருப்பத்தூர் வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் செல்ல வேண்டும். ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையிலிருந்து தேனி செல்லும் வாகனங்கள் சிவகங்கையிலிருந்து மேலூர், அழகர்கோவில், சத்திரப்பட்டி, அலங்காநல்லூர், தனிச்சியம், நகரி, துவரிமான், நாகமலை புதுக்கோட்டை வழியாக தேனி செல்ல வேண்டும். மதுரை நகர்பகுதியில் இருந்து விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் மதுரையில் இருந்து காளவாசல், துவரிமான், கப்பலூர், திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும்.

விமான நிலையம் செல்லும் வாகனங்கள்

விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் கப்பலூர், தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் வழியாக விமானநிலையம் செல்ல வேண்டும்.

தூத்துக்குடியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் எட்டையாபுரம், கோவில்பட்டி, விருதுநகர், திருமங்கலம், கப்பலூர், தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் வழியாக விமான நிலையம் செல்ல வேண்டும்.

திருச்சி மார்க்கமாக மதுரை விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் ஒத்தக்கடை, மதுரை நகர், மாட்டுத்தாவணி வழியாக தெற்குவாசல், அவனியாபுரம் சென்று விமான நிலையம் செல்ல வேண்டும். இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com