அ.தி.மு.க. நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு நிதியுதவி-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக நிர்வாகியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு நிதியுதவி-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுக்குழு கூட்டத்துக்கு வந்து, கார் மூலம் ஊர் திரும்பும்போது, சாலை விபத்தில் உயிரிழந்த கரூர் மாவட்டம் நவக்குளம் கிளை செயலாளர் செந்தில்குமாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அவருடைய குடும்பத்துக்கு கரூர் மாவட்ட கட்சியின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக ரூ.7 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் கடவூர் வடக்கு ஒன்றிய உறுப்பினர் சதீஷ்குமாரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்து சிகிச்சை பெறும் கடவூர் தெற்கு ஒன்றியம், வெங்கடேஸ்வரா நகர் கிளை செயலாளர் எம்.சரவணன், மாவத்தூர் ஊராட்சி, முத்தாலம்மன் கோவில் தெரு கிளை செயலாளர் எம்.பொன்னம்பலம், கழுதிரிக்கப்பட்டி வடக்கு கிளை செயலாளர் கே.முருகேசன் ஆகிய 3 பேரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். இவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com