

சென்னை,
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
* கடலூர் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய அசோக்குமார் திருவண்ணாமலை மாவட்ட தலைமையகத்துக்கு மாற்றப்பட்டார்.
* திருவண்ணாமலை தலைமையகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் வனிதா, திருவண்ணாமலை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.
* வேலூர் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் பாலசுப்பிரமணியன், வேலூர் மாவட்ட போலீஸ் பயிற்சி பள்ளியில் பொறுப்பேற்பார்.
* திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணி செய்யும் பரந்தாமன் ஆவடி போலீஸ் பயிற்சி பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
* திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவில் பணியாற்றும் சுகாஷினி, கோவை போலீஸ் பயிற்சி பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
* தூத்துக்குடி மாவட்ட தலைமையகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணி செய்யும் பொன்ராமு, காஞ்சீபுரம் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.
* ஈரோடு சிறப்பு அதிரடிப்படையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் சக்திவேல், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமையகத்துக்கு மாற்றப்பட்டார்.
* புதுக்கோட்டை மாவட்ட தலைமையகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் அன்பழகன், திருவாரூர் மாவட்ட தலைமையகத்துக்கு நியமிக்கப்பட்டார்.
* திருவாரூர் மாவட்ட தலைமையகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் விஜயகார்த்திக் ராஜ், கோவை மாவட்ட தலைமையகத்தில் பொறுப்பேற்பார்.
* நீலகிரி மாவட்ட தலைமையகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரியும் தம்பிதுரை, கரூர் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
* அரியலூர் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவில் பணி செய்யும் ராஜா சீனிவாஸ், சென்னை போலீஸ் அகாடமிக்கு மாற்றப்பட்டார்.
* சென்னை நலப்பிரிவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் வெள்ளத்துரை, நெல்லை நகர குற்ற ஆவண காப்பகத்துக்கு மாற்றப்பட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.