டிடிவி தினகரன் வெளியேறியதற்கு நான் காரணமா? - நயினார் மறுப்பு

பாஜக கூட்டணியில் இருந்து விலக நயினார் நாகேந்திரன் தான் காரணம் என டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சென்னை,
சில தினங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன், அதற்கு காரணம் நயினார் நாகேந்திரன் தான் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், தமிழ்நாட்டின் இன்றைய மனநிலை நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை என்று கூறிய அவர், கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலை நடுநிலையோடு செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.
டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுகுறித்து பேசியதாவது; “அரசியல் மாற்றங்களால் சில மன வருந்தங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதனை தேசிய தலைமையுடன் பேசித் தீர்த்திருக்கலாம். சூழ்நிலை காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். அவர் வெளியேறியதற்கு நான் காரணம் கிடையாது. ஆனால் சமரசம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்.” என்றார்.






