மின்சார ஸ்கூட்டர் தீயில் எரிந்து நாசம்

மின்சார ஸ்கூட்டர் தீயில் எரிந்து நாசம் ஆனது.
மின்சார ஸ்கூட்டர் தீயில் எரிந்து நாசம்
Published on

 மண்மங்கலம் அருகே உள்ள பெரியவள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவர் தனக்கு சொந்தமான மின்சார ஸ்கூட்டரில் சொந்த வேலை நிமித்தமாக வேலாயுதம்பாளையத்திற்கு வந்தார். பின்னர் இங்கு வேலையை முடித்து விட்டு, பின்னர் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். தளவாபாளையம் பகுதியில் ஒரு திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஸ்கூட்டா தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இளங்கோ உடனடியாக ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு ஓடி விட்டார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, ஸ்கூட்டரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் ஸ்கூட்டர் முழுவதும் எரிந்து நாசமானது.இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com