துணை வேந்தர் நியமன மசோதாவுக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிக்க சட்டம் கொண்டுவரப்படுவதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
துணை வேந்தர் நியமன மசோதாவுக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
Published on

சென்னை,

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் இன்று கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

பல்கலைக்கழக நிர்வாகத்தில் தேவையற்ற குழப்பங்களைத் தடுக்க துணைவேந்தர்களை அரசே நியமிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனை செயல்திட்டம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com