போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி அய்யலூர் ஆர்.வி.எஸ் குமரன் கலை, அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
Published on

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி அய்யலூர் ஆர்.வி.எஸ் குமரன் கலை, அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் திருமாறன் தலைமை தாங்கினார். ஆர்.வி.எஸ். கல்வி குழுமத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார், டாக்டர் சுதர்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

போதைப்பழக்கத்துக்கு அடிமையாவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் போதைப்பொருள் ஒழிப்பு வாசகங்களை வாசிக்க, மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

மேலும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த குறும்படமும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. முடிவில் வேதியியல் துறைத்தலைவர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com