முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆடிட்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தங்கமணியின் ஆடிட்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நாமக்கல்,

அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ஏராளமான ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் ஊழல் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களிலும், சேலம் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையத்தில் உள்ள தங்கமணியின் ஆடிட்டர் செந்தில்குமார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் நாமக்கல் அழகுநகரில் உள்ள மோகன் என்பவரது வீடு உள்பட 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள, தங்கமணியின் நண்பர் குழந்தைவேலுவின் மகன் மணிகண்டனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com