முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்

சென்னையில் முரசொலி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்
Published on

சென்னை

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, வீரமணி, கவிஞர் வைரமுத்து மற்று திமுக எம்பி, எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

அமர்ந்த நிலையில் கருணாநிதி எழுதுவதுபோல சிலை அமைக்கப்பட்டுள்ளது. 6.3. அடி அகலம் 6.5 அடி உயரத்தில் சிலை 30 டன் எடையுடன் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

பின்னர் மம்தா பானர்ஜி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்து உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com