விவசாய நிலங்களை அபகரிக்க முயற்சி

விவசாய நிலங்களை அபகரிக்க முயற்சி அ.தி.மு.க. பிரமுகர் மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்
விவசாய நிலங்களை அபகரிக்க முயற்சி
Published on

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் வானூர் தாலுகா தலகாணிக்குப்பத்தை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் சுமார் 200 விவசாய குடும்பத்தினர் உள்ளனர். நாங்கள் எங்கள் நிலத்தில் முந்திரி, தர்பூசணி, மணிலா, மரவள்ளி, நெல், உளுந்து ஆகியவற்றை சாகுபடி செய்து வருகிறோம். இதை நம்பித்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் முந்திரி தோப்பு உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.1 கோடி வரை விவசாயிகள் மூலமாக வருவாய் கிடைக்கிறது. இந்தநிலையில் எங்கள் நிலத்தை தென்கோடிப்பாக்கத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். எனவே எங்களுடைய விவசாய நிலங்களை தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதுகுறித்து விசாரிப்பதாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com