பள்ளி குழந்தைகளை அதிகம் ஏற்றி வந்த 3 ஆட்டோக்கள் பறிமுதல்

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளை அதிகமாக ஏற்றி வந்த 3 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பள்ளி குழந்தைகளை அதிகம் ஏற்றி வந்த 3 ஆட்டோக்கள் பறிமுதல்
Published on

அவினாசி சுற்றுவட்டாரத்தில் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளுக்கு, அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி செல்வதாக போக்குவரத்து துறையினருக்கு தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போக்குவரத்து இணை ஆணையர் (கோவை) சிவக்குமரன் உத்தரவின்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் முன்னிலையில் அவினாசி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் அலுவலர்கள் அவினாசி சிந்தாமணி பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோக்களை சோதனை செய்தனர். அதில் மூன்று ஆட்டோக்களில் பர்மிட் மற்றும் தகுதிச்சான்று இல்லாமல் அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றிவந்தது தெரியவந்தது. எனவே அந்த 3 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பர்மிட், தகுதிச் சான்று இல்லாமல் வந்த 3 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் 6 வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com