ஜெயலலிதாவின் பிறந்த நாள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் -முதல்வர் பழனிசாமி

ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என 110 வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் -முதல்வர் பழனிசாமி
Published on

சென்னை

தமிழக பட்ஜெட் சட்டசபை கூட்டத்தில் 110-வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என கூறினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கும், பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் மகத்தான பல திட்டங்களைச் செயல்படுத்தி பெண்கள், பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தார்.

* பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் : 1992-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அத்திட்டத்தின்படி ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் 50,000 ரூபாய் வைப்புத் தொகையும், இரண்டுப் பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தை பெயரிலும் தலா 25,000 ரூபாயும் இருப்பு வைக்கப்பட்டு, 20 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தால் கிடைக்கும் தொகை, ஏழைப் பெண்களின் உயர்கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத் தேவைகளுக்கு உதவியது, லட்சக்கணக்கான பெண்கள் இத்திட்டத்தால் பயன்பெற்றனர்.

* மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம் தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்றாலும் அது பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டது

* தொட்டில் குழந்தை திட்டம் ; ஜெயலலிதா 1991 ஆம் ஆண்டு முதல்முறையாக முதலமைச்சரானார். அவர் 1992 ஆம் ஆண்டு கொண்டுவந்த மிகச்சிறந்த திட்டம் தொட்டில் குழந்தை திட்டம். தமிழகத்தில் பெண்குழந்தைகள் பிறந்தால் அவர்களை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்கிற வழக்கம் இருந்த காலத்தில், பெண் குழந்தைகள் கொலையை ஒழித்திடும் நோக்கத்தில், தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பெண் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லையா அரசே வளர்க்கும் என்று கூறி தொட்டில் குழந்தை திட்டத்தை சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரவலாக்கினார்.

* ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த மற்றொரு முக்கிய திட்டம், பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டன. அதே போல, 2003-2006 ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படையும் தொடங்கப்பட்டது என்பது முக்கியமானது.

* சானிட்டரி நாப்கின் வழக்கும் திட்டம்

* பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம்

* மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம்

* அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்

* பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம்

* அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்!

* வெற்றிப் பெண்மணி தந்த விருதுகள்

இதுபோல் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com