அடுத்த தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் - நடிகர் ராதாரவி

அடுத்த தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் என நடிகர் ராதாரவி தெரிவித்து உள்ளார்.
அடுத்த தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் - நடிகர் ராதாரவி
Published on

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க சார்பாக மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். திருச்சுழி தொகுதி பொறுப்பாளர் விஜயரகுநாதன், பொதுச் செயலாளர்கள் சீதாராமன், அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் திரைப்பட நடிகரும் பா.ஜ.க நிர்வாகியுமான ராதாரவி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,

கடந்த 8 ஆண்டுகளாக பா.ஜ.க அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com