பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல்;தம்பதி மீது வழக்கு

தேனி அருகே பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல்;தம்பதி மீது வழக்கு
Published on

தேனி அருகே அரண்மனைப்புதூரை சேர்ந்த சடகோபன் மனைவி சுமித்ரா (வயது 42). இவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், நான், வெங்கடாசலபுரத்தை சேர்ந்த மச்சேந்திரன் மனைவி ஆனந்த சரஸ்வதியிடம் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கடன் வாங்கினேன். அதற்கு ரூ.13 லட்சம் வரை வட்டி கட்டினேன். இந்நிலையில், மேலும் வட்டியும், முதலும் சேர்த்து ரூ.14 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என்றும் என்னை, ஆனந்தசரஸ்வதி மற்றும் மச்சேந்திரன் ஆகியோர் மிரட்டினர் என்று கூறியிருந்தார். இதையடுத்து அந்த புகாரின்பேரில், நடவடிக்கை எடுக்க பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில், கந்து வட்டி தடை சட்டத்தின் கீழ் ஆனந்தசரஸ்வதி, மச்சேந்திரன் ஆகிய 2 பேர் மீதும் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com