16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது


16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது
x

போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் சிறுவனை கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியும், 16 வயது சிறுவனும் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் அந்த சிறுவன், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதேபோல் அந்த சிறுவன் பலமுறை அந்த சிறுமையை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.

இந்த நிலையில் அந்த சிறுமி தற்போது 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அந்த சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் சிறுமியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


1 More update

Next Story