சிறுவன் உள்பட 4 பேர் கைது

அதிராம்பட்டினம் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடிய சிறுவன் உள்பட 4 போ கைது செய்யப்பட்டனர். அவாகளிடம் இருந்து 24 பவுன் நகைகள்- 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்ப்பட்டது.
சிறுவன் உள்பட 4 பேர் கைது
Published on

அதிராம்பட்டினம்;

அதிராம்பட்டினம் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடிய சிறுவன் உள்பட 4 போ கைது செய்யப்பட்டனர். அவாகளிடம் இருந்து 24 பவுன் நகைகள்- 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்ப்பட்டது.

தனிப்படை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு பகுதியில் வீடு புகுந்து தனிமையில் இருந்த பெண்ணை மிரட்டி நகைகளை கொள்ளையடித்த வழக்கு மற்றும் பட்டுக்கோட்டை ரயிலடி, கரம்பயம் ஆகிய பகுதிகளில் சங்கிலி பறிப்பு, துவரங்குறிச்சி பகுதியில் செல்போன் பறிப்பு, மல்லிப்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுஆகியவற்றில் ஈடுபட்டவர்களை பிடிக்க அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பரிசோதித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கைது - பறிமுதல்

இந்தநிலையில் ரூ.2 லட்சம் மதிப்பில் மோட்டார் சைக்கிள் வாங்கி ஓட்டி வந்த முத்தம்மாள் தெரு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் வரதராஜன்( வயது 19) என்பவரை சந்தேகத்தின் போல் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வரதராஜன் கொடுத்த தகவலின் பேரில் கரையூர் தெரு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகன் கண்ணன்( 19), அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் வசந்தகுமார்(19,) மற்றும் ஒரு 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் 4 பேரும் பல்வேறு இடங்களில் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 24 பவுன் நகைகள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com