

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கல்லை கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வரதராஜ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி(40). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்க அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.