பி.டி. கத்தரி சாகுபடி: கள ஆய்வு அனுமதியை திரும்பப்பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பி.டி. கத்தரி சாகுபடிக்கான கள ஆய்வுக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பி.டி. கத்தரி சாகுபடி: கள ஆய்வு அனுமதியை திரும்பப்பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
Published on

சென்னை,

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த எம்.பி. ஒய்.எஸ்.அவினேஷ் ரெட்டி, மக்களவையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்திருக்கும் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர், மரபணு மாற்ற கத்தரி சாகுபடி செய்வதற்கான கள ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றார். மரபணு மாற்றப்பட்ட பி.டி. கத்தரியை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலும், தாவரவியல் தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்தியாவில் விளையும் காய்கறிகளில் 8 சதவீதம் பங்கை கொண்டிருக்கும் கத்தரிக்காய் எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரும். இந்தியாவில் சுமார் 2 ஆயிரத்து 500 வகை நாட்டுப்புற கத்தரி வகைகள் இருக்கின்றன.

ஏழைகளின் காய் எனப்படும் கத்தரிக்காய் உற்பத்தியையும், சந்தையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர துடிக்கும் அமெரிக்க மான்சாண்ட்டா நிறுவனத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு துணை போவது நமது நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். பி.டி. கத்தரி சாகுபடிக்கான கள ஆய்வுக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்பப்பெற வேண்டும். தமிழக அரசு எந்த காரணத்தை முன்னிட்டும் தமிழ்நாட்டில் மரபணு மாற்ற கத்தரியின் களப்பரிசோதனைக்கு அனுமதி அளிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com