தமிழகத்தில் பஞ்சுக்கான 1% நுழைவு வரி ரத்து - சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பஞ்சு மீதான நுழைவு வரி 1% ரத்து சட்டத் திருத்தம் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலே அறிமுகப்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் பஞ்சுக்கான 1% நுழைவு வரி ரத்து - சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

சென்னை

110 விதியின் கீழ் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று அறிவிப்பு வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று பஞ்சு மீதான நுழைவு வரி 1 சதவீதம் ரத்து செய்யப்படுகிறது.

நெசவு தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களைக் கருத்தில் கொண்டு நுழைவு வரி ரத்து செய்யப்படுகிறது.

பஞ்சு மீதான நுழைவு வரி 1 சதவீதம் ரத்து சட்டத் திருத்தம் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலே அறிமுகப்படுத்தப்படும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com