கஞ்சா விற்ற 3 பேர் கைது

பட்டுக்கோட்டையில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற 3 பேர் கைது
Published on

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டையில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரோந்து பணி

பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிருதிவிராஜ் சவுகான் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மேற்பார்வையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பட்டுக்கோட்டை நேரு நகர் தட்டாங்குளம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்த போது, அதில் 1 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

3 போ கைது

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நமசிவாயம் மகன் லட்சுமணன் (29), அதே பகுதியைச் சேர்ந்த மொய்தீன் மகன் ஜாகிர் உசேன் (20) ஆகிய 2 பேர் என்பது தெரிய வந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதேபோல் சுண்ணாம்புக்கார தெருவில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த உதயசூரியபுரம் கழுகப்புளிக்காடு பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் மகன் குமார் (33) என்பவரையும் கைது செய்து அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com