கர்நாடகாவில் கார் விபத்து: ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உயிரிழப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கர்நாடகாவில் கார் விபத்தில் திமுக எம்எல்ஏ பிரகாஷ் மகன் கருணாசாகர் உயிரிழந்ததற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கார் விபத்து: ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உயிரிழப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Published on

சென்னை,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கோரமங்களா பகுதியில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று நள்ளிரவில் விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த, சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனால் மொத்தம் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் ஒருவர் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணாசாகர் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் கார் விபத்தில் திமுக எம்எல்ஏ பிரகாஷ் மகன் விபத்தில் உயிரிழந்த நிலையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகுறிப்பில்,

கழகத்தின் ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரகாஷ் அவர்களின் மகன் கருணாசாகர் பெங்களூரு அருகே நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கோர விபத்துக்கு தன் அன்பு மகனை பறிகொடுத்த இருக்கும் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. அன்பு மகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் ,நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com