

மேகனூர்:
மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சிக்குட்பட்ட செல்லிபாளையம் மதுரை வீரன் கேவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவில் உரிய அனுமதி பெறாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையெட்டி நேற்று முன்தினம் இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதுகுறித்து மேகனூர் பேலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் அனுமதியின்றி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திய கேவில் தர்கர்த்தா மாதேஸ்வரன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.