குறுவட்ட அளவில் பூப்பந்து போட்டி: மேலணிக்குழி‌ அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம்

குறுவட்ட அளவிலான பூப்பந்து போட்டியில் மேலணிக்குழி‌ அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது.
குறுவட்ட அளவில் பூப்பந்து போட்டி: மேலணிக்குழி‌ அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம்
Published on

ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் 19, 17, 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் வளையபந்து, பூப்பந்து, மேஜைப்பந்து போட்டிகள் மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளை தலைமை ஆசிரியர் (பொறுப்பு) புகழேந்தி தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். இதில் பூப்பந்து போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் மேலணிக்குழி அரசு பள்ளி முதலிடமும், கங்கை கொண்ட சோழபுரம் பள்ளி இரண்டாம் இடமும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மேலணிக்குழி பள்ளி முதலிடமும், கங்கை கொண்ட சோழபுரம் பள்ளி 2-வது இடமும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மேலணிக்குழி பள்ளி முதலிடமும், வாணவநல்லூர் நடுநிலைப்பள்ளி 2-வது இடமும் பிடித்தன.

19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் பெரியார் பள்ளி முதலிடமும், பாத்திமா பெண்கள் பள்ளி 2-வது இடமும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாத்திமா பெண்கள் பள்ளி முதலிடமும், மேலணிக்குழி பள்ளி 2-வது இடமும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாத்திமா பெண்கள் பள்ளி முதலிடமும், மேலணிக்குழி பள்ளி 2-வது இடமும் பிடித்தன. மேஜைப்பந்து போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆண்கள் பிரிவில் கல்லாத்தூர் தண்டலை பள்ளி முதலிடத்தையும், மேலணிக்குழி பள்ளி 2-வது இடத்தையும், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் பாத்திமா பெண்கள் பள்ளி முதல் இடத்தையும், மேலணிக்குழி மற்றும் கல்லாத்தூர் தண்டலை பள்ளிகள் 2-வது இடத்தையும் பிடித்தன. 19 வயதுக்குட்பட்ட வளையபந்து ஆண்கள் பிரிவு போட்டியில் மேலணிக்குழி பள்ளி முதலிடமும், சி.எஸ்.ஐ. மகிமைப்புரம் பள்ளி 2-வது இடமும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சின்னவளையம் பள்ளி முதலிடமும், மீன்சுருட்டி ஆண்கள் பள்ளி 2-வது இடமும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சின்ன வளையம் பள்ளி முதலிடமும், பெரியார் பள்ளி 2-வது இடமும் பிடித்தன.

இரட்டையர் பிரிவில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சி.எஸ்.ஐ. மகிமைபுரம் பள்ளி முதலிடமும், மேலணிக்குழி பள்ளி 2-வது இடமும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சின்னவளையம் பள்ளி முதலிடமும், பெரியார் மெட்ரிக் பள்ளி 2-வது இடமும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சின்னவளையம் பள்ளி முதலிடமும், வாணவநல்லூர் நடுநிலைப்பள்ளி 2-வது இடமும் பிடித்தன. 19, 17, 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 19 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் கங்கைகொண்ட சோழபுரம் பள்ளி முதலிடமும், மேலணிக்குழி பள்ளி 2-வது இடமும், 17 வயது பிரிவில் மேலணிக்குழி பள்ளி முதலிடமும், பாத்திமா பெண்கள் பள்ளி 2-வது இடமும், 14 வயது பிரிவில் வாணவநல்லூர் நடுநிலைப்பள்ளி முதலிடமும், பெரியார் பள்ளி 2-வது இடமும், இரட்டையர் பிரிவில் 19 வயது பிரிவில் பாத்திமா பெண்கள் பள்ளி முதலிடமும், மேலணிக்குழி பள்ளி 2-வது இடமும், 17 வயது பிரிவில் மேலணக்குழி பள்ளி முதலிடமும், பாத்திமா பெண்கள் பள்ளி 2-வது இடமும், 14 வயது பிரிவில் பாத்திமா பெண்கள் பள்ளி முதலிடமும், பெரியார் மெட்ரிக் பள்ளி 2-வது இடமும் பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com