வேலூரில் இரவோடு இரவாக.... தெருவில் நிறுத்தி இருந்த டூவிலருடன் சேர்த்து போடப்பட்ட சிமெண்ட் சாலை...!

வேலூரில் சாலைபோடும் போது தெருவில் நின்ற டூவிலருடன் சேர்த்து சிமெண்ட் ரோட்டை போட்டுள்ளது அதிகாரிகளின் மெத்தனபோக்கை காட்டி உள்ளது.
வேலூரில் இரவோடு இரவாக.... தெருவில் நிறுத்தி இருந்த டூவிலருடன் சேர்த்து போடப்பட்ட சிமெண்ட் சாலை...!
Published on

வேலூர்,

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை வேலூர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

காளிகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா. இவரது டூவிலரை நேற்று இரவு வழக்கம் போல் தங்களது கடைமுன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். காலை எழுந்து வந்து பார்த்த போது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தது.

அத்தோடு சேர்ந்து தெருவோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சேர்த்தும் சாலை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து வாகனத்தை எடுக்க முயன்றார்.

ஆனால் சிமெண்ட் கலவை இருகிவிட்டதால் டூவீலரை எடுக்கமுடியவில்லை. பின்னர் ஒருவழியாக போராடி சாலையை உடைத்து வண்டியை மீட்டுள்ளனர். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாக சாலை போட்டுள்ளனர். அப்போது வண்டிக்கும் சேர்த்தே சாலை போட்டுள்ளனர்.

தெருவில் உள்ள குப்பை, கற்கள், கட்டைகள் என எதையும் அகற்றாமல் சாலை போடுகிறார்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மக்கள் பணம் தான் வீணாகிறது என குமுறுகின்றனர். இனியாவது அதிகாரிகள் இவற்றை கண்காணித்து தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com