சென்னை: பர்னிச்சர் குடோனில் பயங்கர தீ விபத்து


சென்னை: பர்னிச்சர் குடோனில் பயங்கர தீ விபத்து
x

ராமாபுரம் அருகே பர்னிச்சர் குடோனில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து 4 கடைகளுக்கு பரவியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

சென்னை

சென்னை ராமாபுரம் அருகே பிளாஸ்டிக் மற்றும் பர்னிச்சர் குடோன் செயல்பட்டு வந்தது. இந்த குடோங்களானது அதிக அளவு குடியிருப்பு பகுதிகள் உள்ள இடத்தில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் மின்கசிவு காரணமாக பர்னிச்சர் குடோனில் தீ ஏற்பட்டது. பின்னர் இந்த தீயானது அருகில் இருந்த பிளாஸ்டிக் குடோன் மற்றும் மெக்கானிக் கடை என அடுத்தடுத்து மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மளமளவென பரவத்தொடங்கியது.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பயங்கர தீயால் அதிக அளவிலான கரும்புகை அப்பகுதியில் சூழ்ந்தது. இதனால் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது இந்த தீ விபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்,

1 More update

Next Story