செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

திருப்பத்தூர் மாவட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
Published on

திருப்பத்தூர் மாவட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டி திருப்பத்தூர் ஸ்ரீ அமிர்தா மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 9 மற்றும் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவிலும், 7, 15 வயது மற்றும் ஓப்பன் பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 205 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

9 வயது ஆண்கள் பிரிவில் டான் போஸ்கோ எக்சலன்ஸ் பள்ளி வீரர் ஹர்ஷவர்தன் முதலிடமும், மேல்குப்பம் அரசு ஆரம்பப் பள்ளி மாணவர் வினோத் குமார் இரண்டாம் இடமும் பெண்கள் பிரிவில் ஹோலி கிராஸ் பள்ளி மாணவி ஆதன்யா, டான் போஸ்கோ எக்சலன்ஸ் பள்ளி மாணவி அனோய்ந்தா ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். 13 வயது ஆண்கள் பிரிவில் ஆதர்ஷ் பள்ளி வீரர்கள் தரன் குமார், தரூன் குமார் முதல் இரண்டு இடங்களையும், பெண்கள் பிரிவில் ஹோலி கிராஸ் பள்ளி மாணவி யாஷ்ஸ்ரீ முதல் இடமும், மீனாட்சி அரசு பள்ளி மாணவி பொண்ணரசி இரண்டாம் இடமும் பெற்றனர். இந்த மாணவர்கள் அனைவரும் தமிழ்நாடு மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

மேலும், பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 60 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் மாவட்ட சதுரங்க கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com