செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா- டிரம்ஸ் வாசித்து அசத்திய ஸ்டாலின்

செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா- டிரம்ஸ் வாசித்து அசத்திய ஸ்டாலின்
Published on

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் இதில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா தொடங்கியது.செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் கியூபிக் நிறங்களை ஒன்று சேர்த்து சிறுவர்கள் அசத்தினர். இந்தியாவின் இதயத் துடிப்பு (ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா) என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடந்தது.

இதில் டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, நவீன்குமார், கீ போர்டு ஸ்டீபன் தேவசிஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் அசத்தினர். அதன்பின், டிரம்ஸ் வாசித்த படியே மேடையில் இருந்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இருந்த இருக்கை அருகே சென்றார். அப்போது மு.க ஸ்டாலின் எழுந்து நின்று சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து அசத்தினார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த விருந்தினர்களையும் வெகுவாக ரசிக்க வைத்தது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com