சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து
Published on

சென்னை,

முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும் நலன்களையும் பேணி காக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுதிறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும் சம வாய்ப்புகளைப் பெற்று தன்னம்பிக்கையுடன் உயர்ந்திட அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் ஆயிரத்து 500 மாதாந்திர உதவித்தொகை வழங்குதல், கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பயண சலுகை, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பணியிடங்கள் ,பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் ,உள்ளாட்சி அமைப்புகள் கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள் மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள், போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் பார்வை குறைபாடு உடையவர்கள் பாதுகாப்பாக சாலையைக் கடப்பதற்கு ஏதுவாககுரல் ஒலிப்பான் சமிக்கைகள் நிறுவியது, இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் மாநில ஆதார வள மையம் நிறுவியது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்விற்காக செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் சமுதாயத்தில் சம உரிமையுடன் வாழ்ந்திடவும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும், பல்வேறு நலத்திட்டங்களை மாற்று திறனாளிகள் அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்தி, வாழ்வில் உயர்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com