விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுநாள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்
Published on

மகாவீர் ஜெயந்தி தினமான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என தமிழ்நாடு மதுபான சில்லறை வணிக விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.

எனவே மகாவீர் ஜெயந்தி தினமான நாளை மறுநாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் இயங்காது. மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

இதேபோல் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் மதுபானக்கூடங்கள், தனியார் மதுபானக்கூடங்கள் இயங்காது. இந்த தகவலை கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com