கோவை தனியார் மில்லில் பெண் தொழிலாளியை கம்பால் சரமாரியாக தாக்கிய மேலாளர், விடுதி காப்பாளர் கைது

கோவை அருகே தனியார் மில்லில் வடமாநில இளம்பெண் மீது சரமாரி தாக்குதல் நடத்திய மேலாளர், விடுதி காப்பாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கோவை தனியார் மில்லில் பெண் தொழிலாளியை கம்பால் சரமாரியாக தாக்கிய மேலாளர், விடுதி காப்பாளர் கைது
Published on

கோவை,

கோவை கணபதி உடையாம்பாளையத்தில் தனியார் மில் உள்ளது. இந்த மில்லில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். இதற்காக மில் வளாகத்தில் விடுதியும் உள்ளது.

இந்த மில்லில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. விடுதியில் தங்கி இருந்தார்.

இளம்பெண் மீது தாக்குதல்

இதையடுத்து விடுதி காப்பாளர் லதா மற்றும் மில் மேலாளர் முத்தையா ஆகியோரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை வேலைக்கு செல்லுமாறு கூறினார்கள். அதற்கு அவர், தனக்கு குணமாகவில்லை என்பதால், சரியான பின்னர் வேலைக்கு வருவதாக கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை கம்பால் சரமாரியாக தாக்கினார்கள்.

வீடியோ வைரல்

இதனால் வலிதாங்க முடியாமல் அவர் அலறினார். இந்த காட்சியை அங்கு இருந்த சிலர் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர்.

இதனால் இந்த வீடியோ வைரலாக பரவியது. இதை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலாளர், விடுதி காப்பாளர் கைது

இதையடுத்து போலீசார் மேலாளர் முத்தையா, விடுதி காப்பாளர் லதா ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com