

சென்னை
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் சென்னை மற்றும் பொள்ளாச்சி தலைமை அலுவலகங்களில் நாளை மறுநாள் முதல் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் விருப்ப மனுவை பெற 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் அடுத்த மாதம் 7-ஆம் தேதிக்குப் பிறகு தேர்தல் குழு அறிவிக்கும் தேதியில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.