விலை வீழ்ச்சியால் ஆடு, மாடுகளுக்கு உணவாகும் கொத்தமல்லி

விலை வீழ்ச்சியால் ஆடு, மாடுகளுக்கு உணவாகும் கொத்தமல்லி
Published on

சூளகிரி:-

சூளகிரி பகுதியில் விலை வீழ்ச்சியால் கொத்தமல்லி ஆடு, மாடுகளுக்கு உணவாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கொத்தமல்லி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் புலியரசி, மருதாண்டபள்ளி, வேம்பள்ளி, மாரண்டபள்ளி, செம்பரசனபள்ளி, அத்திமுகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லி பயிரிடப்பட்டுள்ளது.

இவை விவசாயிகளால் அறுவடை செய்யப்பட்டு, சூளகிரியில் உள்ள கொத்தமல்லி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து தினமும் மூட்டை, மூட்டையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கும், கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பப்படுகின்றன.

விலைவீழ்ச்சி

இந்த நிலையில் கொத்தமல்லி வரத்து மார்க்கெட்டுக்கு அதிகரித்து இருப்பதால் கடந்த சில நாட்களாக அதன் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த வாரம் வரை கடைகளில் ஒரு கட்டு ரூ.20 முதல் 30 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது தோட்டங்களில் ஒரு கட்டு ரூ.2, ரூ.3 எனவும், கடைகளில் ரூ.10-க்கும் குறைவாகவே விற்கப்பட்டு வருகின்றன. இதனால் கொத்தமல்லி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். மேலும் கொத்தல்லியை பறித்து விற்றாலும் செலவு கூட மிஞ்சாது என்பதால் கொத்தமல்லியை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு விட்டனர்.

மேலும் அவை ஆடு, மாடுகளுக்கு உணவாகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com