கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை; அமைச்சர் எச்சரிக்கை

கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை; அமைச்சர் எச்சரிக்கை
Published on

சென்னை,

தமிழக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, தமிழகத்தில், கடந்த இரண்டரை மாதங்களில் 33 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். இன்னும் 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்ற அமைச்சராக நான் இருப்பேன் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,079 பேருக்கு (நேற்று 2,205 பேர்) கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி குறிப்பிட்டு பேசிய அமைச்சர், கொரோனா தொற்று தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. நாளை தினசரி பாதிப்பு இரண்டாயிரத்துக்கும் கீழ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட அளவில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். 33 குழந்தைகள் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் தற்போது நலமுடன் உள்ளனர். மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டுதான் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்ற எண்ணம் மக்களிடையே இருக்க கூடாது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com