தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது - மத்திய அரசுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம்

தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது - மத்திய அரசுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம்
Published on

சென்னை,

சீனாவில் கடந்த 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று நமது நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் பிஎப்-7 ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று திடீர் எழுச்சி பெற்று வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குஜராத்தில் 2 பேரும் ஒடிசாவில் ஒருவரும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது என மத்திய சுகாதார இயக்குனரகத்திற்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.மேலும் தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் எனவும்  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com