

மதுரை
அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி மதுரை சிம்மக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
பின்னர் அழகிரி ஆதரவாளர் மன்னன் கூறும் போது, அழகிரியையும், எங்களையும் உடனே திமுகவில் சேர்க்க வேண்டும். இது தொடர்பாக அழகிரி வீட்டிலிருந்து கையெழுத்து இயக்கம் தொடங்கி திமுக தலைமைக்கு அனுப்ப உள்ளோம் என கூறினார்.