

வடக்கன்குளம்:
ராதாபுரம், கூடங்குளம் பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்குவாரிகளில் இருந்து கனரக வாகனங்கள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும், சாலைகள் சேதமடைவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முறைகேடாக இயங்கும் கல்குவாரிகள் மீதும், அதிக பாரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் கூடங்குளம் அருகே உள்ள புத்தேரி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் நயினார் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.