வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி

கூத்தாநல்லூர் அருகே வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி
Published on

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

தூர்வாரும் பணி

தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க, தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை தூர்வாரும் திட்டத்தின் கீழ், திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளை தூர்வாரும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள, மேலமணலி கிராமத்தில் உள்ள பனையனார் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார்.அப்போது, கலெக்டர் சாருஸ்ரீ, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் இருந்தனர்.

பாசன வசதி

மேலமணலி கிராமத்தில் உள்ள பனையனார் வடிகால் வாய்க்கால் 11.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வாரப்பட உள்ளது. இதன்மூலம், கர்ணாவூர், ஓகைப்பேரையூர், மேலமணலி, ஆத்தூர், ஈழங்கொண்டான், பூந்தாழங்குடி ஆகிய பகுதிகளில் 500 ஏக்கர் பாசன நிலம் பயனடையும். இந்த தூர்வாரும் பணி கர்ணாவூர் முதல் ஊட்டியாணி வரை நடைபெறும். இதன் மூலம் அப்பகுதி விவசாயத்துக்கு தண்ணீர் எளிதில் சென்று அடையும்.நிகழ்ச்சியில் மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனாமணி, வெண்ணாறு கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சிதம்பரம், திருவாரூர் ஒன்றியக் குழு தலைவர் தேவா, மன்னார்குடி ஒன்றியக் குழு உறுப்பினர் குமரேசன், நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ், மேலமணலி ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி, கூத்தாநல்லூர் தாசில்தார் குருமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com