

சென்னை,
திமுக தலைவர் கருணாநிதி, ரத்த அழுத்த குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது ரத்த அழுத்தம் சீராக உள்ளது' என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று தமிழக கவர்னர் பன்வாரிலால், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
உடல் நலம் குன்றியுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும், ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
காவேரி மருத்துவமனையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சென்று ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கருணாநிதி உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது எனவும், உடல் நலம் தேறி வருவதாகவும் அழகிரி தெரிவித்தார். பின்னர் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.