

சென்னை,
திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியார்களிடம் கூறியதாவது:
பல்கலைக் கழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஆளுநர் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது. ஊழல் குறித்து வெளியிட்டுள்ள கவர்னர், நடவடிக்கை எடுக்காதது வேடிக்கையானது.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடக்கிறது. ஊழல் குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் .
இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரியதில் அதிமுகவுக்கு தோல்வி பயம் இருப்பது தெளிவாக தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.