திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில்12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடக்கிறது
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில்12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி
Published on

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வழிகாட்டல் நிகழ்ச்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு "உயர்வுக்கு படி" மற்றும் "கல்லூரி கனவு" வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த வழிகாட்டல், கல்விக்கடன், உதவித்தொகை, முதல் பட்டதாரி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் விடுதியில் தங்கி படித்தல் போன்ற உதவிகள் செய்து தரப்பட உள்ளது.

பயன்பெறலாம்

எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பிற பள்ளிகளில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com