டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி போட்டி

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி போட்டி 1-ந் தேதி நடக்கிறது
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி போட்டி
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு 'கழிவுகளில் இருந்து கலை' என்ற தலைப்பில் இணையவழி போட்டி வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

மாணவர்கள் தங்களது கலை திறனை வெளிப்படுத்தும் விதமாக இந்த போட்டி அமையப்பட்டு உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு 10-ம் முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் https://tinyurl.com/4hpzwyzp என்ற இணைப்பு மூலம் பங்கு பெறலாம். மாணவர்கள் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை மேற்கண்ட முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இணையவழி சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் நிகழ்ச்சி பற்றிய விவரம் அறிய 9894469428 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வழிகாட்டுதலின்படி துறை தலைவர் சிவனணைந்த பெருமாள் மற்றும் பேராசிரியர்கள் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com