தாலுகா அலுவலகத்தை திராவிட தமிழர் கட்சியினர் முற்றுகை

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை திராவிட தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
தாலுகா அலுவலகத்தை திராவிட தமிழர் கட்சியினர் முற்றுகை
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரம் பகுதியில் ஆதி திராவிட நலத்துறை சார்பில் அருந்ததியர் இன மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை மீட்டு தரக்கோரி திராவிட தமிழர் கட்சியினர், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கரு வீரபாண்டியன் தலைமை தாங்கினார். தென் மண்டல துணை தலைவர் ஆதிவீரன், மாநில பொதுச் செயலாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிதிச் செயலாளர் முருகையா, கொள்கை பரப்புச் செயலாளர் குருநாதன், அமைப்புச் செயலாளர் மகாலிங்கம், மகளிர் அணி செயலாளர் முத்துமாரி, சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com