குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகிறது.
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
Published on

மணப்பாறை:

மணப்பாறையில் உள்ள திருச்சி சாலையில் மருத்துவமனை, பள்ளிகள் உள்ளிட்டவை உள்ளது. இந்த சாலையை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மணப்பாறை நகரில் பிரதான சாலையாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த பல நாட்களாக ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால் சாலை சேதமடைந்து சுமார் ஒரு அடி வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் நீர் நிரம்பி இருப்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. இந்த சாலை வழியாக அதிகாரிகள் சென்றாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே குழாயின் உடைப்பை சரி செய்து, சாலையையும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com