637 மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 637 மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை அமைச்சர்கள் வழங்கினர்.
637 மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை
Published on

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 637 மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை அமைச்சர்கள் வழங்கினர்.

புதுமைப்பெண் திட்டம்

விருதுநகர் வி.வி.வி. பெண்கள் கல்லூரியில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உதவி திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 637 மாணவிகளுக்கு ஊக்கத்தொகையுடன் வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் நிதி கல்வி புத்தகம் அடங்கிய புதுமைப்பெண் பெட்டகம், வங்கி பற்று அட்டை ஆகியவை வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஊக்கத்தொகையுடன் புதுமைப்பெண் பெட்டகம், வங்கி பற்று அட்டை ஆகியவற்றை வழங்கினர்.

வலிமையான பொருளாதாரம்

இதைத்தொடர்ந்து ஊக்கத்தொகை பெறும் மாணவிகள் பெற்றோரின் ஆலோசனையுடன் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்தி கல்வி என்னும் நிரந்தர சொத்தை பெற்று பெண் சமுதாயத்தில் வாழ்வில் ஒளியேற்றி வலிமையான பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என அமைச்சர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற்ற மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அசோகன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர சபை தலைவர் மாதவன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரி, சமூக நல அலுவலர் இந்திரா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com