காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 27-ந்தேதி நடைபெற உள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்
Published on

காஞ்சீபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனம் மூலம் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 27-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. முகாமில் கலந்து கொள்ள உள்ள மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளியின் சுய விபரக்குறிப்பு- 3 நகல்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்- 3, கல்விச்சான்றிதழ்களின் நகல்கள்- 3, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை- 3 நகல்கள் மற்றும் ஆதார் அட்டை- 3 நகல்களுடன் முகாமில் கலந்துக் கொள்ளலாம். காஞ்சீபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com