அத்தியாவசிய பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை


அத்தியாவசிய பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
x

கோயம்பேடு மார்க்கெட் துணைமின் நிலையத்தில் உயரழுத்த மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

சென்னை

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் நாளை (20.9.2025, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோயம்பேடு மார்க்கெட் துணைமின் நிலையத்தில் 11 கி.வோ. உயரழுத்த மின்மாற்றி III அமைக்கும் பொருட்டு, 11 கி.வோ. பஸ்பார் விஸ்தரிப்பு பணிகள் அவசரமாக மேற்கொள்ள வேண்டியிருப்பதால் பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கோயம்பேடு மார்க்கெட்: சீனிவாசநகர், பக்தவச்சலம்தெரு, சேமத்தமன் நகர், இடர்ரோடு, மேட்டுகுளம், நியூகாலனி, திருவீதிஅம்மன்கோயில் தெரு, சின்மயாநகர், நெற்குன்றம், ஆழ்வார்திருநகர், மூகாம்பிகைநகர், அழகம்மாள்நகர், கிருஷ்ணாநகர், புவனேஷ்வரிநகர் ஆகிய இடங்களில் நாளை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story